News December 8, 2024
காசநோய் பாதித்தோருக்கு இனி மாதம் ரூ.1,000 உதவித் தொகை

காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை இந்த மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விடுபட மாநில அரசால் ஊட்டச்சத்து உதவித்தொகை மாதம் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இந்த மாதம் முதல் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுக, தவெகவுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், OPS-ன் ஆதரவாளராக இருந்த திருவையாறு Ex MLA MGM சுப்ரமணியன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். சென்னையில் EPS-ஐ சந்தித்த அவர், தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார். ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தன்னை விட்டு பிரிந்து செல்வது OPS-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
News March 13, 2026
CINEMA 360: வேள்பாரியில் தனுஷ்!

*ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தில் தனுஷ் & விக்கி கவுசல் நடிப்பார்கள் என கூறப்படுகிறது *ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதத்திற்கு தள்ளிப்போகிறதாம் *‘கர’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது *‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்காக சம்பளம் வழங்கவில்லை என அறிவு பதிவிட, ஆதாரத்துடன் விவாதிக்க தயாரா என சந்தோஷ் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 13, 2026
தமிழகத்தில் தினமும் ஒரு நிர்பயா: இன்பதுரை MP

மணிப்பூரைப் போல தமிழகத்திற்கும் மத்திய அரசு நாடாளுமன்ற குழுவை அனுப்பி பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என இன்பதுரை MP வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், கடந்த 10 நாள்களில் மட்டும் 2½ வயது குழந்தை, 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும், தினம் தினம் ஒரு நிர்பயா வழக்கை தமிழகம் சந்தித்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


