News March 23, 2024
தோனி இருக்கப் பயமேன்

அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லையென சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிக்கு பின்னர் பேசிய அவர், ‘கேப்டன் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன். நிலைமையை எவ்வாறு கையாள வேண்டுமென்பதில் ஏற்கெனவே அனுபவம் உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினர்’ என்றார்.
Similar News
News October 24, 2025
சிந்திக்க தூண்டும் PHOTOS

சில படங்கள் நம் மனதில் தங்கி, இந்த உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றுகின்றன. இவை யதார்த்தங்கள் மற்றும் ஞானத்தை பிரதிபலிக்கின்றன. ஒருசில விஷயங்களை, வித்தியாசமாகப் பார்ப்பதன் மூலம் தெளிவு கிடைக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. சிந்திக்க தூண்டும் சில போட்டோக்களை, மேலோ பகிர்ந்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா நண்பர்களுக்கு share பண்ணுங்க.
News October 24, 2025
NATIONAL ROUNDUP: டெல்லியில் செயற்கை மழை

*தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேரின் மனு தள்ளுபடி *இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மணீஷ் சர்மா நியமனம் *காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் அக்.29 செயற்கை மழை பொழிய வைக்க திட்டம் *கல்வியின் மூலம் கேரளா வளர்ச்சியடைவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு *டெல்லியை தொடர்ந்து ஹரியானா பஞ்சாப்பில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தகவல்
News October 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.