News December 7, 2024

பேருதான் Rohit.. ஆனா ஆட்டத்துல no ‘HIT’

image

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நியூசி.க்கு எதிரான 6 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 91 ரன்களையே அவர் எடுத்திருந்தார். அதே ஃபார்மையே ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து வருகிறார். 2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 6 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார்.

Similar News

News April 2, 2026

BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹2,400 குறைந்தது

image

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,600 சரிந்து நடுத்தர மக்கள் மற்றும் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,750-க்கும், 1 சவரன் ₹1.10 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி கிலோ ₹2.55 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. SHARE IT

News April 2, 2026

BREAKING: குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலை

image

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்து, அரசுக்கு ₹28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது 14 ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது.

News April 2, 2026

₹1,000 கோடி ஊழல்.. நேருவை விமர்சித்த விஜய்

image

திருச்சி பிரசாரத்தில், அமைச்சர் KN நேருவை விஜய் மறைமுகமாக விமர்சித்தார். இங்கு (திருச்சி) ஒரு அமைச்சர் உள்ளார். நகராட்சித் துறையில் வேலை வாங்கி தருவதாக ₹1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் என விமர்சித்தார். கல்லூரி உதவி பேராசிரியர் பணி 2,000 பேருக்கு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!