News December 7, 2024
WIFI -ஆல் இத்தனை நன்மைகளா..?

செல்போனை சிறிது நேரம் பார்த்தாலே சர்ர்ரென சார்ஜ் கம்மியாவதற்கு காரணம் மொபைல் டேட்டாதான் என்கின்றனர் நிபுணர்கள். மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போது, சிக்னலை தேடவும், 3G, 4G, 5G-க்கு நொடிகளில் மாறவும் செல்போன் பேட்டரி அதிகம் உழைக்கிறது. ஆனால், WIFI யூஸ் செய்கையில், சிக்னல் தொடர்ந்து கிடைப்பதால் சார்ஜ் நீடிப்பதோடு, செல்போனும் நீண்டகாலம் உழைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News August 25, 2025
பிரதமர் மோடி வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

PM மோடியின் டிகிரி தொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின்(CIC) உத்தரவை, டெல்லி ஐகோர்ட் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி யுனிவர்சிட்டியில் 1978-ல் டிகிரி பெற்ற மோடி உள்பட அனைவரது விவரங்களை நீரஜ் என்பவர் CIC-யிடம் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அந்த தகவலை வழங்குமாறு யுனிவர்சிட்டிக்கு CIC கூறியிருந்தது. மோடியின் டிகிரி போலியானது என காங்., சாடியது கவனிக்கத்தக்கது.
News August 25, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. HAPPY NEWS

மிலாடி நபி செப்டம்பர் 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. இதனையொட்டி, TNSTC சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதன்பின், செப்டம்பரில் வார விடுமுறையை தவிர்த்து பிற விடுமுறை இல்லாததால் சொந்த ஊர் செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். SHARE IT.
News August 25, 2025
வளைகாப்பும், கண்ணாடி வளையலும்! ரகசியம் இதுதான்?

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், வளைக்காப்பின் போது, பெண்களுக்கு கண்டிப்பாக கண்ணாடி வளையல் தான் அணிவிப்பார்கள். இது ஏன் என நீங்கள் யோசித்ததுண்டா? இதன் பின்னணியில் ஆன்மீக ரீதியில் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், இதற்கு ஒரு அறிவியல் விளக்கமும் உண்டு. அதாவது, கண்ணாடி வளையலில் இருந்து எழும் ஒலி குழந்தையின் மூளை தூண்டச்செய்து, அதன் வளர்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது. SHARE IT.