News December 7, 2024
அதிமுக மாவட்ட செயலாளர் தப்பி ஓட்டம்

நில மோசடி விவகாரத்தில் காரைக்கால் அதிமுக மாவட்ட செயலாளரும், EX MLAவுமான ஓமலிங்கம் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தக்கலூர் திருலோகசாமி கோயில் தேவஸ்தான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் வாங்கியது உறுதியான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முதல் தலைமறைவாகியுள்ளார். இதனால், அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 25, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. HAPPY NEWS

மிலாடி நபி செப்டம்பர் 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. இதனையொட்டி, TNSTC சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதன்பின், செப்டம்பரில் வார விடுமுறையை தவிர்த்து பிற விடுமுறை இல்லாததால் சொந்த ஊர் செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். SHARE IT.
News August 25, 2025
Already அரசியலில் இருக்கேன்: அதிரடி காட்டும் நடிகர் விஷால்

தான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஊட்டியில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய விஷால், அரசியல் கட்சிகளின் கொடிகளில் பல நிறங்கள் உள்ளன; ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் இல்லை என விமர்சனம் செய்தார். மேலும், விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் தலைகீழாக மாற்றம் கண்டிருக்கும் என்றும் கூறினார்.
News August 25, 2025
பேனாவுல எழுதுனா இவ்வளவு நன்மை இருக்கு..!

கடைசியா எப்போ பேனாவுல எழுதுனீங்க? இந்த கேள்வி இப்போ எதுக்குன்னு உங்களுக்கு தோணலாம். இப்படி கேட்க காரணம் இருக்கு. எல்லாமே டிஜிட்டல் மயமா ஆகிட்டதுனால பேனாவுல எழுதுறத நம்ம மறந்துட்டோம் என்றும் இதனால் கற்றல் அறிவு குறஞ்சிட்டதா நிபுணர்கள் சொல்றாங்க. பேனாவுல எழுதுறது நம்ம அறிவாற்றல கூட்டுறதோட மட்டுமில்லாம பார்கின்சன் நோயைக் கண்டறியவும் உதவுதாம். அதனால, திரும்பவும் பேனாவுல எழுத தொடங்குங்க.