News December 7, 2024
உயிரிழந்த படை வீரர்களை சார்ந்தவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற, படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து அனுசரிப்பில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்த படைவீரர்களை சார்ந்தோர்கள் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர் உள்ளிட்ட 3 நபர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந. சுரேஷ், துணை இயக்குனர் நலன் லெப் கர்னல், வேலு உடனிருந்தனர்.
Similar News
News August 23, 2025
ராணிப்பேட்டை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 23, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.22) காலை 6 மணி முதல் இன்று (ஆக.23) காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 140.6 மி.மீ., நெமிலியில் 102.2 மி.மீ., கலவையில் 98.4 மி.மீ. மழை பதிவானது. அதைத் தொடர்ந்து வாலாஜாவில் 76.4 மி.மீ., மின்னலில் 65.2 மி.மீ., அரக்கோணத்தில் 56 மி.மீ. மற்றும் சோளிங்கரில் 37.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
News August 23, 2025
கூட்டுறவு சங்க பணிகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு.

ராணிப்பேட்டை: கூட்டுறவு சங்கங்களின் ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ள 45 காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களால் இந்த வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 29 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; தேர்வு அக்.11 நடைபெறும்.