News December 7, 2024
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட நபர்களுக்குஆண்டு தோறும் வழங்கப்படும் ஔவையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் முதலமைச்சரால் இந்த விருது வழங்கப்பட உள்ளது . https://awards.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News August 21, 2025
நெல்லை: காவல்துறையில் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுளவர்கள் இங்கே <
News August 21, 2025
நெல்லையில் முதல்முறையாக அறிமுகம்

தமிழக அளவில் முதல் முறையாக நோயாளிகளின் பதிவு மற்றும் சிகிச்சை விபரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு தனி செயலி மூலம் அவர்களுக்கு விவரங்களை தெரிவிக்கும் ஹெச் எம் ஐ எஸ் திட்டம் நெல்லை அரசு மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் ஏற்கனவே எடுத்த சிகிச்சை விபரங்களை அடுத்து வரும் நாட்களில் காட்டி மேல் சிகிச்சை பெற முடியும். *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை – மைசூர் இடையே பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம். நெல்லையிலிருந்து 27ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூரை அடையும். மைசூரிலிருந்து 26ம் தேதி இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.