News March 22, 2024
வாகனங்களில் ஒட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடலூர் டவுன்ஹால் அருகே 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின்
வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (22.03.2024) ஒட்டுவில்லைகளை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
இராஜசேகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News April 11, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
News April 11, 2025
விருத்தாசலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது

விருத்தாசலம் போலீசாருக்கு நேற்று காலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட விருத்தாசலத்தை சேர்ந்த வசந்தி (45), ராமச்சந்திரன் (65), சரண்ராஜ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.