News December 7, 2024
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மெல்ல மெல்ல வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிதமான மழையும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News September 12, 2025
மூலிகை: நன்னாரியின் நன்மைகள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
➤நன்னாரி சாற்றை குடிப்பது சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும், குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
➤உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலை குளிர்ச்சியாக்கவும், ஒற்றைத் தலைவலிக்கும் நன்னாரி சாறு நல்ல மருந்தாகும்.
➤பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒருநாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால், சொறி சிரங்கு குணமாகும். Share it to friends.
News September 12, 2025
ஓடும் ரயிலில் இருந்து குதித்த நடிகை.. ஹாஸ்பிடலில் அனுமதி!

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷூட்டிங்கிற்காக மும்பை ரயிலில் ஏறிய அவர், நண்பர்கள் ரயிலில் ஏறாததால் இறங்க முயன்றுள்ளார். சேலை அணிந்திருந்தால், கால் இடறி கீழே விழ, முதுகு & தலையில் அடிபட்டுள்ளது. மிகவும் பிரபலமான‘ராகினி MMS’ வெப் தொடரிலும், ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ போன்ற படங்களிலும் கரிஷ்மா நடித்துள்ளார்.
News September 12, 2025
BREAKING: கடன் கட்டாவிட்டால் செல்போன் இயங்காது

கடனை முறையாக திருப்பி செலுத்த தவறுவோரின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு RBI அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை பலரும் கடனில் வாங்குகின்றனர். ஆனால், பலரும் அந்த கடனை திருப்பி கட்டாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தகவல்கள் ரகசியமாக காக்கவும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இந்த முடிவு பற்றிய உங்கள் கருத்து என்ன?