News March 22, 2024
தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய முதல்வர்

திருச்சி சிறுகனூர் பகுதியில் திருச்சி மக்களவை தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதை முன்னிட்டு உரையை தொடங்குவதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன், பெரியார் மற்றும் அண்ணா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் உரை நிகழ்த்தினார்.
Similar News
News February 18, 2026
திருச்சி: வாடகை வீடு மோசடி – காவல்துறை எச்சரிக்கை

திருச்சி மக்கள் நலன் கருதி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வாடகை வீடு மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும், போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்காமல் அவசர கதியில் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம். வாடகை ஒப்பந்தம் இல்லாமல் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 18, 2026
திருச்சி: ரயிலில் அடிபட்டு முதியவர் உடல்சிதறி பலி

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே இருப்புபாதை போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவரின் அங்க அடையாளங்களை வெளியிட்டு, அவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 18, 2026
திருச்சி: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி – ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, உப்பிலியபுரம், வையம்பட்டி,மணப்பாறை, மணிகண்டம், துறையூர் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 6 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு 35 வயதிkகுட்ப்பட்டவர்கள் சுய உதவிக்குழுவில் 5 வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் 0431-2412726 என்ற தொலைப்பேசி மூலமாக விவரங்களை தெரிந்து கொள்ளாலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


