News December 7, 2024
சேலம் விவசாயி அசத்தல்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம். இவர் புற்களை நன்கு பதப்படுத்தி அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு எண்ணெய் எடுத்து வருகிறார். இதன்மூலம் நாளொன்றுக்கு ரூபாய் 1,500 முதல் ரூபாய் 3,000 வரை வருவாய் ஈட்டும் விவசாயி, ஏற்கனவே பல கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2026
JUST IN: சேலத்தில் ஒரே இரவில் 7 வீடுகளில் கொள்ளை

வீரகனூர் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தில், சதீஷ்குமார் என்பவரது வீட்டில் 7 பவுன் நகை மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடு போனது. இதேபோல் பச்சையம்மாள், முருகன் உள்ளிட்ட மொத்தம் 7 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 12, 2026
சேலம்: இனி சிலிண்டர் புக் செய்வது ‘ரொம்ப ஈஸி

தமிழகத்தில் இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் சரியாகச் செயல்படாததால் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை இண்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 7588888824 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமும், 7718955555 என்ற எண்ணில் எஸ்.எம்.எஸ் மூலமும் சிலிண்டர் பதிவு செய்யலாம். மேலும், ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
சேலம்: பாமகவில் இணைந்தனர்.. ஷாக்கில் DMK

சேலம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். மேட்டூர் எம்எல்ஏ-வும், மேற்கு மாவட்ட செயலாளருமான சதாசிவம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இணைந்தனர். இது சேலம் மாவட்டத்தில் உள்ள திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


