News December 7, 2024

ரிலீஸுக்கு தயாரான ‘விடுதலை 2’

image

‘விடுதலை 2’ படத்தின் BGM பணிகள் நிறைவடைந்தன. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், BGM பணிகளை இளையராஜா நிறைவு செய்துள்ளார். இதற்கு இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.

Similar News

News March 14, 2026

காஞ்சிபுரத்தில் பரிதாப பலி!

image

குன்றத்தூர்: கொல்லசேரியை சேர்ந்தவர் செல்வகுமார் (44). இவர் நேற்று முன்தினம் ஏரிக்கரை ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 14, 2026

சிலிண்டர்.. காலையிலேயே மகிழ்ச்சி அறிவிப்பு

image

வணிக சிலிண்டரைத் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவலால், பொதுமக்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், சமையல் சிலிண்டர் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்; அதன் உள்நாட்டு உற்பத்தி 30% அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தேவை இருந்தால் மட்டுமே ஆன்லைனில் சிலிண்டரை முன்பதிவு செய்யவும் கேட்டுக்கொண்டார்.

News March 14, 2026

கறார் காட்டும் திமுக.. கடுகடுப்பில் கம்யூனிஸ்டுகள்!

image

2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் சில கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக குறைத்துள்ளது. CPM-க்கு 4, CPI-க்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை கறார் காட்டுவதால், இரு கட்சிகளும் நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளன. அந்த வகையில், இன்று காலையில் CPM நிர்வாகக் குழுக் கூட்டமும், நாளை CPI நிர்வாகக் குழுக் கூட்டமும் நடக்க உள்ளன. கடந்த தேர்தலில் இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

error: Content is protected !!