News December 7, 2024

டிரம்புக்காக பணத்தை தண்ணியாக செலவழித்த மஸ்க்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் ₹2,120 கோடி செலவு செய்துள்ளார். பிரசார செலவு தொடர்பான செலவின விவரங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்களுக்கும், தேர்தல் பிரசார செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் பல கோடியை மஸ்க் அள்ளி வீசியுள்ளார். தற்போது மஸ்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2026

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்.. டிரம்ப் வார்னிங்!

image

ஈரானுடன் முழு ஒப்பந்தம் முடிவாகாத வரை அந்நாட்டை சுற்றி இருக்கும் US படைகள் பின்வாங்காது என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுக்கும் பட்சத்தில், இதுவரை இல்லாத வகையில் மிக பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எக்காரணத்திற்காகவும் அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்க கூடாது என்றும், ஹார்முஸ் நீரிணை திறந்தே இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News April 9, 2026

Gpay-ல் மொத்த பணமும் காலியாகிவிடுமா? CYBER ALERT!

image

Gpay-ல் Pocket money ஆப்ஷனை தொட்டாலே மொத்த பணமும் காலியாகும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம். வங்கி கணக்கு இல்லாத உங்கள் குடும்பத்தினருக்காக <<19598632>>இந்த ஆப்ஷன்<<>> உள்ளது. இதை பயன்படுத்தி QR Scan செய்யும்போது, நீங்கள் PIN உள்ளிட்டால் மட்டுமே அவர்களால் செலவு செய்யமுடியும். ஆகவே பாதுகாப்பானது. பணத்தை எடுப்பதற்கான லிமிட்டை செட் செய்ய, Pocket Money→Add→Set monthly limit என அழுத்தி தொகையை உள்ளிடுங்கள்.

News April 9, 2026

பிரபல இளம் நடிகர் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பாட்ரிக் தன்னுடைய 35-வது வயதில் காலமானார். மூன்று ஆண்டுகளாக மோட்டார் நியூரான் என்ற நரம்பியல் நோயுடன் போராடி வந்த இவரது உடல்நிலை திடீரென சீரியஸானது. இதனையடுத்து 10 நாள்களுக்கு முன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவர், Game of thrones, Blue lights ஆகிய பிரபல சீரிஸ்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றவர்.

error: Content is protected !!