News December 7, 2024

அலையாத்தி காட்டுக்கு செல்ல அனுமதி

image

ஆசியாவின் மிகப்பெரிய காடான முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல வனத்துறை சார்பில் படகுகள் உள்ளது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக வனத்துறை தடை விரித்து இருந்த நிலையில் தற்போது சகஜ நிலைக்கு வந்ததால் இன்று முதல் தடையை நீக்கி படகில் சுற்றுலா செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

Similar News

News March 8, 2026

திருவாரூர்: மது போதையில் தவறி விழுந்து ஒருவர் பலி

image

கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் நேற்று இரவு கோட்டூர் அரசு மதுபானக் கடையில் மதுவை வாங்கிக் கொண்டு அடப்பாற்றில் இருந்து பிரியும் வாய்க்கால் மதகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இந்நிலையில், மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News March 8, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் கடன் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “ஏதேனும் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு முன் அதன் மதிப்புரை அதிகாரப்பூர்வ உரிமங்களை சரிபார்க்கவும் கடன் வழங்குவதற்கு முன் பணம் கேட்கும் செயல்களை தவிற்குமாறும், அது தொடர்பாக வழங்கப்படும் சலுகைகளை ஏற்க வேண்டாம்.” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.7) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!