News December 7, 2024
வேணாம்டா டேய்….வேணாம்டா

நீ சொல்லி நான் ஏன் குடியை நிறுத்தணும் என இருப்பவர்களின் மூஞ்சில் அடிச்ச மாதிரி இந்திய மருத்துவர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 32 வயதான ஒருவரின் ‘Weekend Drinker’ ஒருவரின் Liver புகைப்படத்தையும், தன் மனைவியின் Liverஐ ஒப்பீடு செய்துள்ளார். அவரது மனைவியின் Liver இளஞ்சிவப்பு நிறத்தில் ஆரோக்கியமாகவும் குடிப்பவரின் Liver கருமையான நிறத்தில் இருக்கிறது. குடிக்காதீங்கடா மக்கா…
Similar News
News March 8, 2026
USA, இஸ்ரேலுக்கு புதிய செக்

பிப்.28-ம் தேதி இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியில் <<19292495>>165 மாணவிகள்<<>> பலியாகினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தாக்குதலை போர் குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் 165 மாணவிகள் பலியான இத்தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
News March 8, 2026
CPM-ம், பாஜகவும் ஒரே கட்சிதான்: ராகுல் காந்தி

கேரளாவில் CPM மற்றும் BJP என்பது தனித்தனி கட்சிகள் அல்ல. CJP என்ற ஒரே கட்சியாக அவை செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸை வீழ்த்துவதே CJP கட்சியின் முக்கிய நோக்கம் என்ற அவர், CPM விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவில்லை என பேசியுள்ளார். மேலும், ட்ரம்பின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதைப் போலவே, மோடியின் கட்டுப்பாட்டில் பினராயி விஜயன் உள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 8, 2026
நாட்டின் பெண் சக்திகள்: PM மோடி மகளிர் தின வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பெண் சக்திகளுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் உறுதி, திறமை மற்றும் படைப்பாற்றலால், நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களின் சாதனைகள் நாட்டை ஊக்குவிப்பதுடன் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதிலும் பங்களிப்பதாக பாராட்டியுள்ளார்.


