News December 7, 2024
செங்கல்பட்டு அரசு அதிகாரி தற்கொலை

போரூர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக SRMC போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில், இறந்தவர் போரூர் அம்பாள் நகரை சேர்ந்த செந்தில்வேல் என்பதும், இவர் செங்கல்பட்டு வணிக வரித்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
Similar News
News October 2, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்டோபர்-01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 1, 2025
செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

செங்கல்பட்டு மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News October 1, 2025
செங்கல்பட்டு: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த<