News March 22, 2024
சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலியின் சாதனை

இன்றைய போட்டியில் 21 ரன்கள் அடித்த கோலி, ஐபிஎல்லில் CSK அணிக்கு எதிராக 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் CSK-க்கு எதிராக 1000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக தவான் 1057 ரன்கள் அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னர் முதல் இடத்தில் உள்ளார். இவர் PBKS-க்கு எதிராக 1105, KKR-க்கு எதிராக 1075 ரன்கள் எடுத்துள்ளார்.
Similar News
News February 12, 2026
ஏன் முடி, நகம் வெட்டும்போது வலிப்பதில்லை?

மனித உடல் உயிருள்ள செல்களால் ஆனது என்றாலும், வெளியில் தெரியும் முடி மற்றும் நகங்களின் நீட்சி இறந்த செல்களால் ஆனவை. அதனால் இவற்றை வெட்டும் போதும் வலிப்பதில்லை. அதே நேரத்தில் முடியின் வேர் தோலுக்குள் இருப்பதால், பிடுங்கும் போது வலிக்கிறது. அதே போல, நகத்தின் அடிப்பகுதி நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், தெரியாமல் சற்று ஒட்டி வெட்டிவிட்டால் பயங்கர வலி ஏற்படுகிறது.
News February 12, 2026
சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக்(48) குடல் புற்றுநோய் காரணமாக காலமானார். உலக புகழ்பெற்ற Dawson’s Creek தொடர் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அவர், Varsity Blues போன்ற ஹிட் தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், The Big Bang, Power Rangers போன்ற மெகா ஹிட் படங்களிலும் ஜேம்ஸ் வான் டெர் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News February 12, 2026
ராமதாஸை ஒழிக்க சதியா?

அரசியலிலிருந்து தன்னை ஒழித்துக் கட்டுவதற்காக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக அன்புமணியை ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார். தைலாபுரத்தில் பேசிய அவர், பொய் பேசுவதையே அரசியலாக கொண்ட ஒரு கூட்டத்தை பாமகவிலிருந்து நீக்கிவிட்டோம்; நீதிமன்றத்தையும் அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என விமர்சனம் செய்தார். மேலும், தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி என்பதை அடுத்த வாரம் வியாழக்கிழமை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


