News December 7, 2024

விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த ரஷ்மிகா

image

நடிகை ரஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை நடிகர் விஜய் தேவரகொண்டா குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மாலில் தேவரகொண்டாவின் அம்மா மாதவி, சகோதரர் ஆனந்த் ஆகியோர் அவருடன் சேர்ந்து வந்ததைக் கவனித்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சல் போட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Similar News

News April 9, 2026

3 மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு.. 9 மணி நிலவரம்

image

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், காலை 9 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 17.41%, கேரளாவில் 16.23%, அசாமில் 17.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் முறை வாக்காளர்கள், பொதுமக்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

News April 9, 2026

பிரசார களத்தில் குழந்தைகள்.. பொங்கும் சமூக ஆர்வலர்கள்!

image

தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ECI அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், ஒருசில பெற்றோர் தங்களது கட்சித் தலைவர் மீதான பற்றால் குழந்தைகளை வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரத்திற்கு அழைத்து செல்கின்றனர். இது ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். உதயநிதி, விஜய்யின் பிரசாரங்களில் குழந்தைகள் இடம் பெறுவது வாக்குக்கான அரசியல் என SM-ல் விவாதம் வெடித்துள்ளது.

News April 9, 2026

சிலிண்டர் விலை ₹317 வரை குறைகிறது.. மகிழ்ச்சி செய்தி!

image

சிலிண்டர் விலை ₹317 வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக & தொழில்துறை சபை(CTI) PM மோடிக்கு சிலிண்டர் மீதான வரியை குறைக்க கடிதம் எழுதியுள்ளது. அதில், வீட்டு சிலிண்டர் மீதான வரி 5%, வணிக சிலிண்டர் மீதான வரி 18%-ஐ நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால் வீட்டு சிலிண்டர் ₹43, வணிக சிலிண்டர் ₹317 வரை குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!