News December 7, 2024

பிங்க் பந்தும் இந்திய வீரர்களும்…

image

<<14805831>>பிங்க்<<>> பந்தினை IND அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளித்தாக கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “IND பந்துவீச்சாளர்கள் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் AUS அணிக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டனர். AUS அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் IND அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது துரதிஷ்டவசமானது” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

கனடாவிடம் யுரேனியம் வாங்கும் இந்தியா!

image

அரிய வகை கனிமங்கள் துறையில் இந்தியா-கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PM மோடி – கனடா PM மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அணுசக்தி தேவைக்காக, ₹24,000 கோடி மதிப்பிலான யுரேனியத்தை 2035 ஆண்டு வரை கனடா வழங்கும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

News March 3, 2026

இன்று மாலை 3:20-க்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க..

image

‘பிளட் மூன்’ எனப்படும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. நிலா அடர் ஆரஞ்ச் நிறத்தில், நீல விளிம்புடன் ஒளிரவுள்ளது. சென்னையில் இந்த கிரகணத்தின் இறுதி பகுதி மட்டுமே தெரியுமாம். மாலை 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:47 மணி வரை நிலா ரத்த சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ளதாம். தொலைநோக்கி வழியாக இந்த கிரகணத்தை மக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

தவெகவுடன் காங்கிரஸா? செல்வப்பெருந்தகை

image

தவெகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக வெளியாகும் தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். தவெகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச கட்சித் தலைமை, மாநிலத் தலைவரான தன்னிடம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், பின்வாசல் அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை என்ற அவர், திமுகவுடனே கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளோம் என்றார்.

error: Content is protected !!