News March 22, 2024
தடுமாறும் பெங்களூரு அணி

17ஆவது ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், டு
பிளெஸிஸ் 35, கோலி 21, கிரீன் 28, மேக்ஸ்வெல் மற்றும் படிதர் டக் அவுட்டாகினர். சென்னை அணி தரப்பில் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் 4, தீபக் சாகர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Similar News
News October 23, 2025
உலகை ஆளப்போகும் தொழில்துறைகள்

உலகம் வேகமாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், சில தொழில்துறைகள் வளர்ச்சி அடைந்து, உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நமது வாழ்கை முறையையும் மாற்றி அமைக்கும். அவை என்னென்ன தொழில்துறைகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. வேறு ஏதேனும் தொழில்துறை உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 23, 2025
தேவா வீட்டில் சோகம்… நிறைவேறாத ஆசை

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் (எ) சபேசன் இன்று காலமானார். இந்நிலையில், அவரது நிறைவேறாத ஆசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த காலத்து கே.வி.மகாதேவன் முதல் அனைத்து மூத்த இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளதாக சபேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதை பலரும் பகிர்கின்றனர். RIP
News October 23, 2025
பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

சுக்கிர பகவான் வரும் நவ.2-ம் தேதி, தனது சொந்த ராசியான துலாமுக்குள் அடியெடுத்து வைப்பதால் பின்வரும் 3 ராசிகளுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்குமாம்: *துலாம்- தொழில்ரீதியாக முன்னேற்றம் அடையும், திருமண உறவு வலுப்பெறும் *தனுசு- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், முதலீடுகள் லாபம் தரும் *மகரம்- வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வுக்கு வாய்ப்பு, வியாபாரம் செழிக்கும், எதிர்பாராத தனவரவு கிடைக்கும்.