News December 7, 2024

கரூர் மாவட்ட ஆட்சியரின் நாளைய திட்ட விவரம்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் பங்கேற்க உள்ள நாளை (07.12.2024) நிகழ்ச்சிகள், காலை 10.00மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காசநோய் கண்டுபிடிக்கும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, மாலை 4.00 மணி அளவில் முன்னாள் படை வீரர், நலன் கொடிநாளை முன்னிட்டு, முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் தம் குடும்பத்தை சார்ந்தோருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

Similar News

News March 12, 2026

கரூர்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News March 12, 2026

கரூர்: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் (19). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், டெக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார். அங்கு பணியாற்றிய 16 வயது சிறுமியுடன், கமலேஷூக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த பிப். 20ல் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று முன்தினம் கமலேஷை போக்சோவில் கைது செய்தனர்.

News March 11, 2026

கரூர்: ஆஸ்துமா நோயால் ஒருவர் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் மஞ்சமேடு பகுதியை சேர்ந்த 60 வயது சக்திவேல், மனைவி சிவபாக்கியத்துடன் கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தவர். குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் எடுத்துவரும் சக்திவேல், நேற்று சேங்கல் சந்தைப்பேட்டையில் மயங்கி விழுந்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!