News December 6, 2024
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், மனுக்கள் குழுவிடம், தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்து மனுக்களை(5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை 600 009″ என்ற முகவரியிட்டு நேரடியாகவோ, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மூலமாகவோ டிச.20ம் தேதிக்குள் அனுப்பலாம்.
Similar News
News November 7, 2025
நத்தம் அருகே விபத்து! தாய், மகன் பலி…

மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அழகுமீனாள் (50) மற்றும் அவரது மகன் சரவணபாண்டி (24) நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாயின் வீட்டில் இருந்து திரும்பிய போது, பூதகுடி அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில், அழகுமீனாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சரவணபாண்டி, மருத்துவமனையில் உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
திண்டுக்கல்: நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே (நவம்பர் 6) இன்று நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் முதியவரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
News November 7, 2025
திண்டுக்கல்லில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதிய ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/GTEResultAUG2025.php என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


