News December 6, 2024
கண்ணீர் விட்ட பெண்.. கலங்கிய விஜய்

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூலை’ தவெக தலைவர் விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். அதன்பின், தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வழங்கினார். புத்தகம் வழங்கியபோது, விஜய்யுடன் வேங்கைவயலை சேர்ந்த பெண் கண்ணீருடன் பேசினார். இதனால், கலங்கிய அவர் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.
Similar News
News August 29, 2025
டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு.. புதிய டிஜிபி யார்?

சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், வீட்டுவசதி துறை டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய டிஜிபி நியமிக்கப்படும் வரை பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனை அரசு நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
News August 29, 2025
ஓரக்கண்ணால் சுண்டி இழுக்கும் அனன்யா பாண்டே

பாலிவுட்டில் கலக்கி வரும் அனன்யா பாண்டே, அட்லி – அல்லு அர்ஜுனின் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உள்ளது. திரையுலகில் நுழைய நிறைய தடைகளை தாண்டியதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அனன்யா தெரிவித்திருந்தார். அனைத்தையும் மீறி இன்று வெற்றிகரமான நடிகையாக உள்ள அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இப்போ டிரெண்டாகியுள்ளது. மேலே உள்ள போட்டோஸை கண்டு ரசியுங்கள்..
News August 29, 2025
‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன்? மனம் திறந்த சத்யராஜ்

39 ஆண்டுகளுக்கு பின் ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் நடித்திருந்தார். ஆனால், ‘சிவாஜி’ படத்திலேயே மிகப்பெரிய சம்பளத்துடன் நடிக்க வாய்ப்பு வந்தும், அதை சத்யராஜ் ஏற்கவில்லை. அந்த வாய்ப்பை ஏன் ஏற்கவில்லை என சத்யராஜ் இப்போது மனம் திறந்துள்ளார். அதாவது, நடிகராக தனக்கு மார்க்கெட் குறைந்து கொண்டிருந்த நேரம் அது என்பதால், வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.