News December 6, 2024
நாங்குநேரி சின்னத்துரை குடும்பத்தினருடன் நடிகர் விஜய்

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய“எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.தொடர்ந்து, நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் வெட்டுப்பட்ட சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி, தாய் அம்பிகா ஆகியோருக்கு புத்தகத்தை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்
Similar News
News December 6, 2025
நெல்லை: வழுக்கி விழுந்த இளைஞர் பரிதாப பலி!

கங்கைகொண்டான் ஆலடிபட்டி பகுதியை சேர்ந்த முருகையா என்பவருடைய மகன் கருப்பசாமி (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளித்துவிட்டு வந்தபோது எதிர்பாரதவிதமாக டைல்சில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
News December 6, 2025
நெல்லையில் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

மத்திய அரசு மோட்டார் வாகன தகுதிச் சான்று கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 9 நள்ளிரவு முதல் 5,000-க்கும் மேற்பட்ட லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் சுமார் 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
News December 6, 2025
நெல்லை: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

நெல்லை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <


