News December 6, 2024
பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். கல்வி தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 16, 2025
விடுமுறை: கோவை மக்கள் கவனத்திற்கு

கோவை, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, பொதுமக்கள் விடுமுறையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் முன் அருகிலுள்ள காவல் நிலையங்களில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது பாதுகாப்பான விடுமுறையை உறுதி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
News October 15, 2025
கோவை: நாளை கடைசி! மிஸ் பண்ணிடாதீங்க….

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News October 15, 2025
கோவை இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு!

கோவை வடவள்ளி தான்சா நகரை சேர்ந்த இளநீர் வியாபாரி வைகுந்தம் கூத்தாண்டவர் கோவில் அருகே கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது, கடை முன்பு ஒருவர் படுத்திருந்துள்ளார். அவரை எழுப்ப முயன்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு இளநீர் வெட்டும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். இப்புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் சுப்ரமணியம் என்பவரை நேற்று கைது செய்தனர்.