News December 6, 2024

விவசாயிகளுக்கு இனி ₹2 லட்சம் கிடைக்கும்..!

image

சிறு, குறு விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், பிணையம் இல்லாத விவசாயக் கடன்களுக்கான வரம்பை ₹1.6 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக RBI உயர்த்தியுள்ளது. உணவு பொருட்கள் மீதான பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மலிவாக மற்றும் எளிதாகக் கிடைக்கும் கடனை அதிகரிப்பதன் மூலம், நிலையான விவசாய உற்பத்தியை மேம்படுத்த RBI முடிவு செய்துள்ளது.

Similar News

News July 7, 2025

சீன அதிபர் ஜி ஜின் பிங் ஓய்வு?

image

சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிரித்து கொடுக்க தொடங்கியுள்ளாராம். இதனால் அவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தியா தவிர அனைத்து பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார உறவை கொண்டிருக்கும் சீனா, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. இப்படியான சூழலில் அவர் ஓய்வு பெற உள்ளதாக வரும் தகவல்கள் அதன் நட்பு நாடுகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

News July 7, 2025

இனி ஹாஸ்டல்கள் இல்லை ‘சமூகநீதி விடுதிகள்’

image

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

News July 7, 2025

5 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடையை உடன் எடுத்துட்டு போங்க. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!