News December 6, 2024
தொழிலதிபர் கொலையில் விருதுநகர் பெண் உட்பட 4 பேர் கைது

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் கஃபூரை ஏப்.13.2023 அன்று விருதுநகரை சேர்ந்த ஆயிஷா உள்ளிட்ட 4 பேர் கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரித்த போது மாந்திரீகம் மூலம் 4760 கிராம் தங்க நகைகளை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி அவரை கொலை செய்து நகையை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. நகைக்காக தொழிலதிபரை கொன்ற வழக்கில் 20 மாதங்களுக்குப் பிறகு கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News October 28, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறப்பதில் சிக்கல்

சிவகாசி பகுதியில் அக்.31 அன்று பட்டாசு ஆலைகளை திறந்து அடுத்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தியை தொடங்க சிலர் முடிவு செய்துள்ளனர். சில பட்டாசு ஆலைகள் பிரதோஷமான நவ.3 அன்று சிறப்பு பூஜையுடன் உற்பத்தியை தொடங்க உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பட்டாசு ஆலைகளை விரைவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
News October 28, 2025
சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 28, 2025
விருதுநகர்: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை.,

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <


