News December 6, 2024
பாமக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நியமனம்

சீர்காழி, மாதிரவேளூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய தலைவர் பா. பாலதண்டாயுதம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான நியமன ஆணையை பாமக தலைவர் ராமதாஸ் இன்று வழங்கி அவரது பணி சிறக்க வாழ்த்தினார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளருக்கு பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
மயிலாடுதுறை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

மயிலாடுதுறை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
மயிலாடுதுறை: பசு மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 15 உயர்த்தி வழங்க கூறி நேற்று பசு மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
News December 30, 2025
மயிலாடுதுறை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<


