News December 6, 2024
நோட் பண்ணுங்க.. இன்ஸ்டாவில் சூப்பர் வசதி வந்திருக்கு..!

பயனர்களை கவரும் வகையில் புதுபுது அப்டேட்களை இன்ஸ்டாகிராம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மெசேஜ்களை Schedule செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜை டைப் செய்துவிட்டு Send பட்டனை Long Press செய்தால் Schedule ஆப்ஷன் காட்டும். அதில் மெசேஜ் Send ஆக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை செலக்ட் செய்யலாம். சமீபத்தில் லைவ் லொகேஷன் ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது.
Similar News
News February 10, 2026
ஸ்டாலின் பேச்சு இனி மக்களிடம் எடுபடாது: EPS

திமுகவின் அழுத்தத்தாலேயே மருத்துவ கல்வியில் 7.5% உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது போன்ற மிகப் பெரிய பொய்யை CM ஸ்டாலின் கட்டமைப்பதாக EPS சாடியுள்ளார். வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும்
ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது எனவும் விமர்சித்துள்ளார். பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவர் வாழ்க்கை நிலைக்காது என்பதை அவர் உணரும் காலம் விரைவில் வர உள்ளது என்றார்.
News February 10, 2026
மாமியாரை பாலியல் கொடுமை செய்த மருமகன்

நெஞ்சை பதறவைக்கும் கொடுமையான சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த மனைவியின் தாயை, மதுபோதையில் இருந்த மருமகன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். வீட்டில் தாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள், தங்கையின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்துள்ளார். தலைமறைவான அந்த கொடூரனை போலீஸ் தேடி வருகிறது. இத்தகைய மனித மிருகத்தை என்ன செய்வது?
News February 10, 2026
IT வேலைய விட்ருங்க.. இதை பண்ணா வருமானம் கொட்டுதே!

எவ்வளவு உழைத்தாலும் IT-ல் சம்பாதிக்க முடியலையா? ஒருவர் இஸ்திரி போட்டே மாசத்துக்கு ₹2 லட்சத்துக்கு மேல் வருமானம் பார்க்கிறார். தினமும் 350 உடைகளை Iron செய்து ஒரு நாளுக்கு ₹3,500 சம்பாதிக்கும் அவர், Dry cleaning உள்பட எல்லாம் சேர்த்து மாதத்திற்கு ₹2,83,500 வரை சம்பாதிக்கிறார். எல்லா செலவுகளும் போக இவர் கையில் ₹2 லட்சத்துக்கு மேல் லாபம் நிற்கிறதாம். அப்புறம் என்ன.. இஸ்திரி கடை போட்டுடலாமா?


