News December 6, 2024
சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறப்பா?

புயல், கனமழையால் சென்னை, விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், இன்னும் பாடங்களை ஆசிரியர்கள் முடிக்கவில்லை. இதன்காரணமாக, விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், புதுச்சேரி அரசு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என கூறியுள்ளது.
Similar News
News October 20, 2025
மார்க் ஷீட் தொலஞ்சிடுச்சா? ஆதார் இருந்தாலே போதும்

10th, +2, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை உடனடியாக பெற வேண்டுமா? <
News October 20, 2025
தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன்: ஸ்மிருதி மந்தனா

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் தோற்றதற்கு முழு பொறுப்பையும் ஏற்பதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். 52 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில், 88 ரன்கள் எடுத்து நன்கு செட்டாகியிருந்த மந்தனா தேவையின்றி தூக்கி அடித்து அவுட்டானார். இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என வருந்தியுள்ள ஸ்மிருதி மந்தனா, தவறான ஷாட்களை ஆடியதே தோல்விக்கான காரணம் என்றும் கூறியுள்ளார்.
News October 20, 2025
தீபாவளி விடுமுறை.. மேலும் 3 நாள்களுக்கு HAPPY NEWS

தீபாவளி விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்றவர்கள் சிரமமின்றி பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்.21 முதல் 23 வரை 15,129 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் ஊர்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.