News December 6, 2024
ஈரோடு வந்த ரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாகாப்பட்டினம் – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து ஈரோடு வந்தது. வரும் வழியில் பொது பெட்டியில் ஈரோடு ரயில்வே போலீசார், சோதனை நடத்தினர். அப்போது யாரும் உரிமை கோராமல் இருந்த 2 பைகளை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிந்தது. மொத்தம் 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 14, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 14, 2025
ஈரோடு: 100 % மானியம் வழங்கும் திட்டம் APPLY NOW!

ஈரோடு: நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவ சிறு/குறு விவசாயிகளுக்கு 100 % மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியமும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக சிறு/குறு விவசாயிகள் 2 எக்டரும், பெரிய விவசாயிகள் 5 எக்டரும் வரை பயன்பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார்,குடும்ப அட்டை, பட்டா, பயிர் அடங்கல், சிறு / குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை வைத்து இந்த லிங்க் <