News December 6, 2024
ஈரோடு: வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு நோட்டீஸ்

ஈரோடு ஜவுளி ஒருங்கிணைந்த வளாக கட்டிடத்தில், செயல்பட்டு வரும் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூபாய் 3,540, மாநகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை செலுத்தாத 74 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரி மணிஷ் உத்தரவின் பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நோட்டீஸ் நேற்று அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை பாக்கி, ரூ.26 லட்சத்து 19ஆயிரத்தி 600 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
Similar News
News October 14, 2025
ஈரோடு: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 14, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக் 15) நாளை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார். உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் பங்கேற்று பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
News October 14, 2025
ஈரோடு மக்களே அவசியம் பாருங்க!

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <