News December 6, 2024
திருவாரூர் மாவட்டத்தில் நாளை வேலை நாள்

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவிற்காக கடந்த மாதம் உள்ளூர் விடுமுறை அளிக்க பட்டதை ஈடு செய்யும் பொருட்டு நாளை (7/12/24) சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
Similar News
News August 13, 2025
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

வலங்கைமான் தாலுக்கா ஆலங்குடி அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இன்று காலை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் ரவா கிச்சடி சாப்பிட்டபோது அதில் பல்லி கிடந்தது தெரியாமல் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், 8 மாணவர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News August 13, 2025
திருவாரூர் வருகை தரும் இந்திய குடியரசுத் தலைவர்!

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 3-ம் தேதி திருவாரூர் வருகிறார். தொடர்ந்து மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
News August 13, 2025
திருவாரூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <