News December 6, 2024
UP காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு

UP காங்கிரஸைக் கூண்டோடு கலைத்து மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் SPயோடு கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 6 இடங்களில் மட்டுமே வென்றது. இடைத்தேர்தலில் களமிறங்காமல் SPக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், திடீரென UP காங்கிரஸை மொத்தமாகக் கலைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 4, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

தங்கம் விலை 22 கேரட் கிராமுக்கு ₹100, சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,250-க்கும், சவரன் ₹90,000-க்கும் விற்பனையாகிறது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே ஏறுமுகத்தில் இருந்த தங்கம்<<18192239>> சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மீண்டும் மளமளவென சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 4, 2025
தனித்தொகுதியில் தனி கவனம் செலுத்தும் திமுக!

தனித் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு இதர சாதியினர் ஓட்டுப்போடுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதனால்தான், கடந்த தேர்தல்களில் கூட்டணி வலுவாக இருந்தும், தனித் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றது. குறிப்பாக, பொன்னேரி, வாசுதேவநல்லூர், அவிநாசி உள்ளிட்ட பல தனித் தொகுதிகளில் நீண்டகாலமாக DMK போட்டியிடவில்லை. தற்போது தனித் தொகுதிகளில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.
News November 4, 2025
புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி, அரசம்பட்டி அருகே 3-ம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரியிலிருந்து ஆந்திராவின் பூதலப்பட்டு வரை அதியமான் பெருவழியை ஒட்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக புதிய கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. இதில், தண்டம், குடை, சேவல், பன்றி, ஏர்கலப்பை, குத்துவிளக்கு போன்ற வணிக சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் புதிய ஆய்வுகளுக்கு வழி வகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


