News December 6, 2024
காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 715 பயனாளிகளுக்கு 6.59 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நீர் வனத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 5, 2025
வேலூரில் ரயில்வே வேலை… சூப்பர் வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <
News August 5, 2025
வேலூர் மாவட்டத்திற்கு இனிமே நிம்மதி!

பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வந்த 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். எஸ்.பி. மயில்வாகனன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இனிமேல் வேலூர் மாவட்டம் போதை பழக்கம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்.
News August 5, 2025
வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.05) வேலூர் மாநகராட்சி மண்டலம் -4ல் டோல்கேட் நாதன் மஹால், கணியம்பாடி ஊராட்சி காட்டுப்புத்தூர் அண்ணாமலையார் மண்டபம், காட்பாடி ஊராட்சி சின்ன வள்ளி மலை ஜம்பு மகரிசி மண்டபம், பேர்ணாம்பட்டு ஊராட்சி கமலாபுரம் ஜி.எஸ்.எம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.