News December 6, 2024

IND-AUS: இந்திய அணி ஆல்அவுட்

image

AUSக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் IND 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஆஸி.,வின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் (37), நிதிஷ்(42) ரன்கள் எடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி(7), ரோஹித் (3) ஆகியோர் சொதப்பினர். AUS அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.

Similar News

News October 27, 2025

விஜய்யின் அரசியல் போக்கு சரியா?

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல், மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் இன்று சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து TVK அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு கூட அழைப்பு விடுக்காமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது. ஒருபுறம் அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும், அதற்கு தீனிபோடும் வகையிலேயே விஜய்யும் செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News October 27, 2025

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள மொன்தா புயலைத் தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்களது படகுகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News October 27, 2025

சர்வதேச சந்தையில் மீண்டும் சரியும் தங்கம் விலை!

image

உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது. தற்போது 1 அவுன்ஸ்(28g) $48(₹4,216) சரிந்து $4,047-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $1.34 சரிந்து $48-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த வார தொடக்கத்தில் மளமளவென சரிந்து, வார இறுதியில் ஏற்றம் கண்ட தங்கம், தற்போது மீண்டும் குறைந்து வருவதால் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!