News December 6, 2024

திருப்பத்தூரில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் வழங்கினார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

Similar News

News August 11, 2025

திருப்பத்தூர்: உடனே இத பண்ணுங்க.!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <>கிளிக்<<>> பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

திருப்பத்தூர்: குட்டையில் மூழ்கி 3 வயது சிறுவன் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டின் அருகாமையில் இருந்த குட்டையில் அதே பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற 3 வயது சிறுவன் இன்று (ஆக.11) விழுந்து உயிரிழந்தார். சடலத்தை கைப்பற்றி அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 11, 2025

திருப்பத்தூர்: முன் மாதிரியான சேவை விருது அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு முன் மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுக்கான விண்ணப்பங்கள் 12.08.2025-க்குள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

error: Content is protected !!