News December 6, 2024
தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க டெண்டர்

கோவையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. இதனால் கோவையில் தங்க நகை பூங்கா வேண்டும் என்ற சில கோரிக்கைகளை தங்க நகை தொழிலாளர்கள் அண்மையில் முதல்வரிடம் தெரிவித்தனர். அவரும் உறுதியளித்தார். இந்நிலையில் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் 3.41 ஏக்கரில் தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
Similar News
News October 22, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், ஷீபா நகர், கொள்ளுப்பாளையம், ஊத்துப்பாளையம், காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டம்பாளையம், மோளக்காளிபாளையம், வலையாம்பாளையம், வாகராயன்பாளையம், இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், செங்கப்பள்ளி, வடக்கலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News October 22, 2025
கோவையில் வீடு தேடி வரும் அபராதம்

கோவை மாநகராட்சியில் தினமும், 1,200 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, வெள்ளலுார் கிடங்கில் குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பொது இடங்களில் குப்பையை வீசிவிட்டு செல்பவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து, ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை, அபராதம் விதிக்கப்படும். இதனை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 22, 2025
ஊட்டி மலை ரயில் சேவை நாளையும் ரத்து

கனமழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் அன்றைய தினம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் பணிகள் இன்னும் நிறைவடையாததால் நாளை(அக்.21) அன்றும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.