News December 6, 2024
SSLC தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2025 ஏப்ரலில் நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் இன்று(டிச.,6) முதல் அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வியானவர் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள் 17.12.24; தேர்வு கட்டணம் மொத்தம் ரூ.195; கூடுதல் தகவல்களை dge.tn.gov.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 14, 2025
ஆளூர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி

குமரி, இரணியல் – ஆளூருக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று (அக்.13) ஒரு முதியவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, இறந்தவர் ஆலுவிளையை சேர்ந்த அல்லிராஜ் (வயது 90) என்பதும், தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது அவர் மீது ரெயில் மோதியதும் தெரியவந்தது.
News October 14, 2025
குமரி: சிறுவனின் தாய் மீது வழக்கு

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழுக்கம்பாறை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தபோது அவரது வயது 17 என்பதும் பிளஸ்-1மாணவன் என்பதும் தெரியவந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதித்த இளம் சிறாரின் தாய் மீது வழக்குப்பதிவு.
News October 14, 2025
குமரி: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

குமரி மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <