News December 6, 2024
குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 57 பேர் பாதிப்பு

சென்னை குரோம்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 57 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், குரோம்பேட்டை மருத்துவமனையில் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் 6 பேரும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
Similar News
News August 28, 2025
விஜய்யின் அடுத்த அதிரடி.. திமுக, பாஜக கலக்கம்

தவெக மாநாடு குறித்த பேச்சுகளே இன்னும் அடங்காத நிலையில், விஜய் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார். ஆணவக் கொலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடி இருக்கிறது தவெக. ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றுமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கும் உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவின் ஆணவக் கொலைக்கு விஜய் வாய் திறக்கவில்லை என விமர்சனம் எழுந்தது கவனிக்கத்தக்கது.
News August 28, 2025
பாகிஸ்தானுக்கு அல்ல சீனாவுக்கான செய்தி

இந்தியா சமீபத்தில் அக்னி -5 ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது. ராக்கெட் படையை உருவாக்க உள்ளதாக பாக்., அறிவித்த சில நாள்களில் இதை பரிசோதித்ததால், இது அந்நாட்டிற்கான செய்தி என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இது சீனாவிற்கு சொல்லப்பட்ட செய்தி. மணிக்கு 30,000 கி.மீ., வேகத்தில் 5,000 கி.மீ., தூரம் பயணித்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது அக்னி -5. இதன்மூலம் சீனாவின் வடக்கு பகுதிகளை எளிதாக தாக்கலாம்.
News August 28, 2025
நடிகர் மாதவன் ஆபத்தில் சிக்கினார்

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள லே பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், ‘2008-ல் ‘3 இடியட்ஸ்’ ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.