News December 6, 2024

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுவிஸ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. UBS வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் 1,757ஆக இருந்த பில்லினியர்களின் எண்ணிக்கை 2,682ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 268 பேர் ₹100 கோடி சொத்து மதிப்புடன் பில்லினியர்களாக உருவெடுத்துள்ளனர். இந்தியாவில் 185 பில்லினியர்கள் உள்ளனர்.

Similar News

News August 29, 2025

சிறிய கட்சிகளுக்கு ₹4,300 கோடி நன்கொடை

image

குஜராத்தில் 10 சிறிய கட்சிகள், கடந்த 5 ஆண்டுகளில் ₹4,300 கோடி நன்கொடை பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளும் சேர்த்து ₹39.02 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டிய நிலையில், தணிக்கை அறிக்கையில் ₹3,500 கோடி செலவிட்டதாக கட்சிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை ECI விசாரிக்குமா (அ) சத்திய பிரமாணம் கேட்பதோடு முடித்துக் கொள்ளுமா என ராகுல் வினவியுள்ளார்.

News August 28, 2025

Xiaomi-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஆப்பிள், சாம்சங்

image

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் Xiaomi நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. விளம்பரங்களில் தங்களது தயாரிப்புகளை கொச்சைப்படுத்துவதை உடனே நிறுத்த அந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. கடந்த ஏப்ரலில், ஐபோன் 16 புரோ மேக்ஸ் கேமரா, Xiaomi 15 அல்ட்ரா கேமராவை விஞ்சும் என நினைப்பவர்களுக்கு ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள் என Xiaomi விளம்பரம் வெளியிட்டது. அதேபோல் சாம்சங்கை தாக்கியும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

News August 28, 2025

விஜய்யின் அடுத்த அதிரடி.. திமுக, பாஜக கலக்கம்

image

தவெக மாநாடு குறித்த பேச்சுகளே இன்னும் அடங்காத நிலையில், விஜய் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார். ஆணவக் கொலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடி இருக்கிறது தவெக. ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றுமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கும் உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவின் ஆணவக் கொலைக்கு விஜய் வாய் திறக்கவில்லை என விமர்சனம் எழுந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!