News December 6, 2024

யானை தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்

image

தேவர்சோலை பேரூராட்சி செம்பங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கேத்தி (55). இவர் மண் வயல் கடை வீதியில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நேற்று திரும்பி சென்று கொண்டு இருந்தார். போஸ்பறா சங்கிலி கேட் பகுதி சென்ற போது, புதரிலிருந்து வெளிவந்த யானை தாக்கி காயம் அடைந்தார். உடனே இவர் உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News

News August 13, 2025

நீலகிரி: 8வது போதும்.. அரசு வேலை ரெடி!

image

நீலகிரி மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 13, 2025

ஆட்சியர் கூட்டரங்கில் சட்ட விழிப்புணர்வு முகாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து தமிழக அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

நீலகிரி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளுக்கு வரவேற்பு

image

நீலகிரி: வாழைத் தோட்டம் GRG நினைவு மேல்நிலைப் பள்ளியில்  உதகை அரிமா சங்கம் சார்பில் விண்வெளி அறிவியல் தலைப்பில் விழிப்புணர்வு  நிகழ்ச்சி நேற்று(ஆக.12) நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ( இஸ்ரோ ) முன்னாள் விஞ்ஞானிகள் டாக்டர் சுரேந்திர பால் , டாக்டர் சுந்தரமூர்த்தி ,  டாக்டர் எச் .போஜராஜ் , டாக்டர் நகுலன் ஜோகி ஆகியோர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் வரவேற்றார்.

error: Content is protected !!