News December 6, 2024
காற்றில் பரவும் மர்ம நோய்க்கு 79 பேர் மரணம்

காங்கோ நாட்டில் பரவிவரும் மர்ம நோய்க்கு இதுவரை 79 பேர் மரணம் அடைந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளே உள்ளனர். இது எவ்வகையான நோய் என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில், “Disease X” என பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா போல இந்த நோயும் காற்றில் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
நான் உறங்க போவதில்லை: CM ஸ்டாலின்

திமுக மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால், தானும் உறங்கப் போவதில்லை, உங்களையும் உறங்கவிட போவதில்லை என ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், வரும் நாள்களில் திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், தமிழகத்தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்றும் கூறினார்.
News August 14, 2025
தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை மீது வழக்கு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்திக்க கிளம்பிய தமிழிசை அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும் தடையை மீறி போராட்டக்களத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். போலீசார் தனது வீட்டை சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும் என பேட்டியில் கேட்டிருந்தார். இந்நிலையில், கோர்ட் உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக கூறி தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News August 14, 2025
கழிப்பறையிலும் திமுக ஊழல்: இபிஎஸ்

ஒரு நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ₹800 என ₹1,000 கோடிக்கு சென்னையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கழிப்பறையிலும் திமுக ஊழல் செய்திருப்பதாகவும் விமர்சித்தார். ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு சென்று, அவர்களுடன் தேநீர் சாப்பிட்டு ஆதரவாக பேசினார். ஆனால் தற்போது அவர்கள் போராட்டத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றும் கூறினார்.