News December 6, 2024
ரயிலில் 5 இலக்க எண் அர்த்தம் தெரியுமா?

ரயில் பெட்டியின் 5 எண்களில், முதல் 2 எண்கள் ரயில் உருவான ஆண்டை குறிக்கிறது. கடைசி 3 எண்கள், ரயில் பெட்டி எவ்வகை என்பதை குறிக்கிறது. 001-200: AC பெட்டிகள், 201-400: 2ஆம் ஸ்லீப்பர், 401-600: ஜெனரல் வகுப்பு, 601-700: நாற்காலி வகுப்பு, 701-800: நாற்காலி, லக்கேஜ் ரேக், 801+: பேன்ட்ரி, ஜெனரேட்டர், அஞ்சல் பெட்டிகள் ஆகும். உதாரணமாக, 08453 என்றால், 2008ல் உருவான ரயில், ஜெனரல் பெட்டி என அர்த்தம்.
Similar News
News October 25, 2025
சற்றுநேரத்தில் நாடு முழுவதும் முடங்க போகிறது.. ALERT

நாடு முழுவதும் இன்று (அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என SBI அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
News October 25, 2025
அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள்: செல்லூர் ராஜு

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் கேலி செய்வதாக செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக என் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்த முடியாத அளவுக்கு ரோடு படுமோசமாக உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், நான் ஃபார்ம் ஹவுஸுக்கு சென்றுவிட்டதாக அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கேலி செய்து, தவறுகளை சமாளிக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.
News October 25, 2025
அடிக்கடி டிஷ்யூ யூஸ் பண்றீங்களா?

*சிறுநீரக உறுப்பை பாதிக்கும்.
*ஏற்கெனவே ஆஸ்துமா, நிமோனியா இருந்தால், அதன் பாதிப்பை அதிகரிக்கும்.
*டிஷ்யூவில் எண்ணெய் பதார்த்தங்களை வைத்து பிழிந்துவிட்டு சாப்பிடும்போது, டிஷ்யூவிலுள்ள ரசாயனங்கள் உடலுக்குள் செல்லும்.
*புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, காட்டன் கர்சீப்களையே பயன்படுத்துங்கள். அதனையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க


