News December 6, 2024

புகாருக்கு வாட்ஸ-அப் பண்ணுங்க 

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்போர், பதுக்குவோர் பற்றிய தகவல் தெரிந்தால், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04567-230 759, ஹலோ போலீஸ் 83000 31100, மாவட்ட தனிப்பிரிவு 04567-290 113, 94981 01615ல் தகவல் தெரிவிக்கலாம். தடை செய்த குட்கா, புகையிலை பொருட்களை விற்போர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

ராம்நாடு: நிலம் வாங்குறீங்களா? இதை கவனிங்க…

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <>இங்கே கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News August 13, 2025

கமுதி: லஞ்சம் பெற்ற VAO மற்றும் இடைத்தரகர் கைது

image

கமுதியில் நபர் ஒருவர் வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு விஏஒ பிரேமானந்த் தனக்கு நான்காயிரம் பணம் வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாயை விஏஒவிடம் கொடுக்கும் பொழுது, கையும் களவுமாக பிடிபட்டார். இடைத்தரகரும் கைது செய்யப்பட்டார்.

News August 13, 2025

ராம்நாடு: ஏமாறாமல் வெளிநாடு செல்ல வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெற மாவட்ட நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்களை வெளியிட்டுள்ளன. போலி ஏஜெண்டுகளால் யாரும் ஏமாறாமல் இருக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பாக நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம். ஏஜென்ட்கள் விவரம் பெற <>இங்கே க்ளிக் <<>>செய்யவும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!