News December 6, 2024

கடன் வாங்குவதில் சிக்கல் இருக்கா?

image

வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல் இருந்தால் அரசிடம் தெரிவிக்கும்படி மினிஸ்டர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார். MSME நிறுவனங்களுக்கு கடன் மட்டுமல்லாது, வேறு வழிகளில் நிதி திரட்டவும் உதவ அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறைந்து வருவதாக தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், கூடுதல் பிணை, வட்டி குறித்தும் தெரியப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News October 19, 2025

அக்டோபர் 19: வரலாற்றில் இன்று

image

* 1888 – நாமக்கல் கவிஞர் பிறந்தநாள். *1910 – நோபல் பரிசு பெற்ற தமிழர் சுப்ரமணியன் சந்திரசேகர் பிறந்தநாள். *1943 – காச நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது *1953 – நடிகர் மதன் பாப் பிறந்தநாள். *1956 – நடிகர், பேச்சாளர் ஞானசம்பந்தன் பிறந்தநாள். *1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. *2006 – நடிகை ஸ்ரீவித்யா இறந்தநாள். *2023 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இறந்தநாள்.

News October 19, 2025

National Roundup: பிஹாரில் தனித்து போட்டியிடும் JMM

image

*பிஹார் தேர்தலில் 5 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டது. *டெல்லியில் 28 JNU பல்கலை., மாணவர்கள் கைது. *நிதி ரீதியாக தன்னிறைவு பெற்ற பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு. *ஹேமந்த் சோரனின் JMM கட்சி, பிஹாரில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு. *ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாக உமர் அப்துல்லா அறிவிப்பு.

News October 19, 2025

ருக்மணியை கவர்ந்த ஹீரோ இவர்தான்!

image

‘காந்தாரா : சாப்டர் 1’ படம் மூலமாக பான் இந்திய நடிகையான ருக்மணி வசந்த் உருவெடுத்துள்ளார். நேஷனல் கிரஷ் என பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில், அவரை கவர்ந்த ஃபேவரிட் ஹீரோ தெலுங்கு நடிகர் நானி என கூறியுள்ளார். நானியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும் எனவும், அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் ருக்மணி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!