News December 6, 2024
இயக்குநர் ஜெயபாரதி காலமானார்

தமிழில் மாற்று சினிமாவை இயக்குவதில் உறுதியாக இருந்த இயக்குநர் ஜெயபாரதி (77) சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. 1979ஆம் ஆண்டு ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் ‘குடிசை’ படத்தை இயக்கினார் ஜெயபாரதி. பின்னர், 2010ஆம் ஆண்டு புத்திரன் படத்தை இயக்கி தமிழக அரசின் விருதுகளை வென்றார்.
Similar News
News January 14, 2026
‘மத்திய பட்ஜெட்’ மக்களிடம் கருத்து கேட்கும் அரசு

பிப்.1-ம் தேதி 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது. இந்நிலையில், பட்ஜெட் உருவாக்கம் குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை ஜன.16-ம் தேதிக்குள் வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு MyGov.in-ல் லாகின் செய்து Activities→Union Budget 2026-27→Comment Box-ல் கருத்துகளை பதிவிடுங்கள். இதனால், மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.
News January 14, 2026
பொங்கல் வாழ்த்து அட்டைகள் பார்த்திருக்கிறீர்களா?

இன்று வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி, நம் பொங்கல் வாழ்த்துகளை சொல்லி விடுகிறோம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் என்றாலே வாழ்த்து அட்டைகள்தான். பொங்கல் காட்சிகள், நடிகர்கள், தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற வாழ்த்து அட்டைகளை பார்த்துப் பார்த்து வாங்கி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்புவோம். தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையை வாங்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி!
News January 14, 2026
இரவு 10 மணிக்கு மேல் போனில் இதை பார்த்தால்..

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.


