News December 6, 2024
புதுவை முதலமைச்சரின் வாழ்த்து செய்தி

புதுவையில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள் இன்று (டிச.06) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்நாளில், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் ஒன்றிணைந்து உறுதியேற்போம் என கூறியுள்ளார்.
Similar News
News October 28, 2025
புதுவை: வாட்ஸ்அப்-ஐ ஹேக் செய்து பண மோசடி

புதுவை பாகூரை சேர்ந்த பெண்ணின் வாட்ஸ்அப்-ஐ மர்ம நபர்கள் ஹேக் செய்து அப்பெண் பேசுவது போல் பேசி பலரிடம் பணம் கேட்டு மோசடி செய்துள்ளனர். மேலும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஒருவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி அவரிடமிருந்து ரூ.20,000 பெற்று ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
புதுவை: ஏனாமில் பேரிடர் மீட்புக்குழு வருகை

மோன்தா புயல் இன்று மாலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி காக்கிநாடா அருகிலுள்ள புதுவை பிராந்திய பகுதியான ஏனாமிற்கும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசாகப்பட்டினத்தில் இருந்து ஏனாமிற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர். மேலும் புதுவையிலிருந்து ஐ.ஆர்.பி.என். வீரர்களும் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.
News October 28, 2025
“அரசை நம்பியிருந்தால் சிரமம்”-முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நேற்று புதிய மின்சாரப் பேருந்தை தொடங்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசும்பொழுது, “அரசை மட்டும் நம்பியிருந்தால் சிரமம். பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில், அதில் பணியாற்றுவோர் செயல்பட வேண்டும். விரைவில் பி.ஆர்.டி.சி மூலமும் பஸ்கள் வாங்கவுள்ளோம். அதன்படி மொத்தம் 100 பஸ்களுக்கு மேல் வரும்.” என தெரிவித்துள்ளார்.


