News March 22, 2024

காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு தேரடி அருகே வரும் திங்கள் அன்று மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

Similar News

News September 8, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

காஞ்சிபுரம்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 7, 2025

காஞ்சி: குழந்தை வரம் பெற இந்த கோயிலுக்கு போங்க!

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் விஸ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!