News December 6, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் நலன் கருதி விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் (டிச.9) முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

விழுப்புரத்திற்கு புதிய பேருந்துகள் – துவக்கி வைத்த மு.அமைச்சர்

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்ட 5 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

News October 15, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

விழுப்புரம்: ரூ.35,400 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு!

image

விழுப்புரம் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் (16.10.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!